Skip to content

மணல் கொள்ளை.. எஸ்பி உள்ளிட்டோர் மீது ஏட்டு புகார்

தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை காவலராக பணியாற்றி வரும் பிரபாகரன் மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து, போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றால், அங்குள்ள அதிகாரிகள், போலி ரசீதுகளை தயார் செய்து, சம்பந்தப்பட்ட வாகனங்களை விடுவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கனிம வளக் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து கொண்டு செல்லும் போது, இன்ஸ்பெக்டர் முன்னிலையிலேயே, கொள்ளை கும்பல் தன்னை மிரட்டி, வாகனங்களை எடுத்துச் செல்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இது  தொடர்பாக பிரபாகரன் டிஜிபிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மணல் மாபியாக்களுக்கு துணை போகும் போலீஸ் அதிகாரிகள், லஞ்சம் வாங்கி குவித்துக் கொள்வதாகவும், கனிம வளக் கொள்ளை அதிகம் நடக்கும் சிவகிரியில் உயிருக்கு அச்சுறுத்தலோடு பணியாற்ற முடியாது என்றும் தன்னை போலீஸ் பணியில் இருந்து விடுவிக்கக்கோரி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்த மறுநாளே, தனக்கு வேறு பணி கொடுக்கப்பட்டதாகவும் எஸ்.பி உள்பட காவல் உயரதிகாரிகள், கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் வாகனங்களை கடத்திச் சென்ற விக்னேஷ் பி.எல்.ஆர் மற்றும் தாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தன் மீது வன்முறை தாக்குதலோ, வாகன தாக்குதலோ நடந்தால், அதற்கு முழுக் காரணம் தென்காசி எஸ்பி , சப்டிவிஷன் அதிகாரிகளும், மணல் மாபியாக்களுக்கு தான் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!