சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலியாகியுள்ளனர். கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ராமையா, பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 25 அடி ஆழத்திற்கு குழி தோண்டி கொண்டிருந்தபோது விஷவாயு தாக்கி 2 பேரும் மயக்கமடைந்தனர். இதனைதொடர்ந்து தீயணைப்பு துறையினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
