புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்தவர் எஸ். சதாம் உசேன் (33). இவர் பேராவூரணி அருகேயுள்ள கிராமத்தில் வசிக்கும் நண்பர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது, அதே கிராமத்தில் வீடு எடுத்து தங்கிய இவர் 2021 ஆம் ஆண்டில் அப்பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும், அச்சிறுவனுக்கு ரூ. 10 கொடுத்து வெளியே சொன்னால், கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார். இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து சதாம் உசேனை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து சதாம் உசேனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
