அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 22 ஆவது பள்ளி ஆண்டு விழா, திருக்குறள் பெயர் பலகை திறப்பு விழா தமிழ் கூடல் விழா பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில தலைவர் அரிமா மு. ஞானமூர்த்தி மாணவர்கள் படிப்போடு நின்றுவிடாமல் தங்களது அனைத்து திறமைகளையும் விளையாட்டிலும், சுற்றுச்சூழல், பாதுகாப்பிலும், கவணம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .
மற்றொரு சிறப்பு விருந்தினர் ஏபிஎன் ஜவுளி ஸ்டோரரிலிருந்து ராஜா மாணவர்களுக்கு பிளாஸ்டிக்
பொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கி கூறி அனைவருக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆன குடிநீர் பாட்டில் வழங்கினார் .
உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில பொருளாளர் சௌந்தர்ராஜன் திருக்குறளை பின்பற்றி ஒவ்வொருவரும் வாழ்க்கை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள் ஆண்டாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனியம்மாள் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னதுரை, தொழிலதிபர் அழகுதுரை, வார்டு உறுப்பினர்கள் விஜயகுமார், அருள்சாமி , ஊராட்சி செயலர் மாரிமுத்து, மக்கள் நலப் பணியாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் செந்தமிழ் செல்வி வரவேற்றார். ஆசிரியர் தனலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆசிரியர்கள் கோகிலா செவ்வேள், ஆரோக்கியசாமி, ஆய்வக உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் மேற்கொண்டனர். நிறைவாக ஆசிரியர் செந்தில்குமரன் நன்றி கூறினார்.