அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வன உயிரினங்களுக்கும் உணவு வழங்க வேண்டிய அவசியம் மற்றும் வழிமுறைகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானியங்களில் விதைப்பந்து தயாரிக்கப்பட்டு கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் விதைப்பந்து விதைக்கும் நிகழ்வு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலப்பழுவூரில் உள்ள கோல்டன் கேட்ஸ் தனியார் பள்ளியில் பயிலும் 250 பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் இயற்கை ஆர்வலர்கள் வனத்துறையினர் கலந்து கொண்டு சிறுதானிய விதைப்பந்துகளை விதைத்தனர்.
தமிழகத்திலேயே முதன்முறையாக சிறுதானிய விதைப்பந்துகளை தயாரித்து கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் துவங்கப்படும் நிகழ்வு தமிழகமெங்கும் வனப்பகுதிகளில் இத்திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் இயற்கை ஆர்வலர்களும் முன்னெடுக்க வன உயிரினங்களான காட்டுப்பன்றி மான் குரங்கு மயில் உள்ளிட்டவைகளுக்கு உணவு வழங்க வேண்டிய அவசியம் மற்றும் வழிமுறைகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு விரிவடையும் ஈர நிலங்கள் பாதுகாப்பு குறியீடான ராம்சார்
அங்கீகாரம் பெற்ற கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் இருந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி துவங்குகிறது. நாடு முழுக்க விரிவடையும் போது வன உயிரினங்கள் பாதுகாக்கப்படுவதோடு விரைவில் வனப்பகுதி பசுமையாகும் வன உயிரினங்களுக்குத் தேவையான உணவு முழுமையும் விரைவில் கிடைத்து தன்னிறைவு பெறுவதோடு வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் உணவு தேடி வருவது குறையும் இதனால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவது குறையும். எனவே ராம்சார் அங்கீகாரம் பெற்ற வனப்பகுதியான கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஈரநிலங்களுக்கான பகுதியானதாக விளங்குவதால் தேர்வுசெய்யப்பட்டு சிறுதானிய உணவு வனவிலங்குகளுக்கும் பல்லுயிர்களுக்கும் கிடைக்கும் வகையில் சிறுதானிய விதைப்பந்து விதைக்கும் நிகழ்வு துவங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இதன் மூலம் வன உயிரினங்களே விரைவில் விதைப்பரவலை ஏற்படுத்தி விடும் மேலும் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறும் போது வனவிலங்குகள் சாலையை கடக்கும் போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பதனை தவிர்க்க இயலும் வனவிலங்குகள் பாதுகாக்கவும் இயலும் வனவிலங்குகள் வெளியே வருவதால் பொதுமக்கள் அச்சப்படுவதனையும் தவிர்க்க இயலும் எனவும் தெரிவித்தார். வனவிலங்குகளை காக்க ஒன்றுகூடுவோம் விதைப்பந்துகளை பரவலாக்குவோம்! என விதைப்பந்துகளை கையில் ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கோல்டன் கேட்ஸ் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பரணம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர் பழனிசாமி அரியலூர் மாவட்ட வனத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அரிய நிகழ்வில் பங்கு கொண்ட மாணவர்களை வாழ்த்தினர். முன்னதாக கரைவெட்டி பறவைகள் சரணாலய கலிங்கு அருகில் வடிகாலில் உள்ள ஈரமான பகுதிகளில் துவரை அவரை கம்பு கேழ்வரகு சோளம் பூசணி பரங்கி பயறு வகைகள் என அனைத்திலும் தயாரிக்கப்பட்ட விதைப்பந்துகளை விதைத்தனர்.