கடந்த 2 ஆம் தேதி முதல் மயிலாடுதுறையை சிறுத்தை கலக்கி வருகிறது. மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களில் ஏப்ரல் 2 ஆம் தேதி பதிவானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக ஆடை நரி என்று சிறுத்தை கொன்று போட்டது என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. தொடர்ந்து, சிறுத்தையைத் தேடும் பணியில் வனத் துறையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் வனத்துறையினர் வைக்க கூண்டுகளில் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சில இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட எல்லையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்ட எல்லையான எஸ். புதூரிலிருந்து காஞ்சிவாய் வரையிலான பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, வனத் துறையினர் திங்கள்கிழமை முதல் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை 5 கூண்டுகளுடன் இரையாக வைத்து கண்காணிக்கப்படுகிறது.
இதனிடையே, சிறுத்தை குறித்து அச்சுறுத்தும் வகையில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என வனத் துறையினரும், காவல் துறையினரும் அறிவுறுத்தி உள்ளனர்.