மத்தியப் பிரதேசத்தின் இக்லேராவைச் சேர்ந்த கிராமவாசிகள் சிறுத்தையை துன்புறுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள இக்லேரா அருகே உள்ள வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.
இந்நிலையில், முதலில் கிராமவாசிகள் சிறுத்தையை பார்த்ததும் பயந்தனர், ஆனால் பின்னர் சிறுத்தை ஆக்ரோஷமாக இல்லாமல் சோம்பலாக இருப்பதைப் பார்த்தபோது, அது உடம்பு சரியில்லை என்று புரிந்து கொண்டனர். கிராம மக்கள் சிறுத்தையை சுற்றி வளைத்து விளையாட ஆரம்பித்தனர்.
சிறுத்தையுடன் விளையாட்டுத்தனமான செல்யல்களில் ஈடுபட்டதுடன், அதனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். வைரலாகும் அந்த வீடியோ, உடல்நிலை சரியில்லாத சிறுத்தை ஊர் மக்களால் சூழ்ந்திருப்பதையும், ஒருவர் சிறுத்தையின் முதுகில் அமர்ந்திருப்பதையும் காட்டுகிறது. பின்னர், அவர்களில் ஒருவர் நிலைமை குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, அந்த சிறுத்தை மேல் சிகிச்சைக்காக இந்தூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லல்பட்டுள்ளது.