கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (80). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, தன்னிடம் சைக்கிள் பஞ்சர் ஒட்ட வந்த போது சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் சிறுமியிடம் வாக்குமூலம் அளித்தார். இதனை தொடர்ந்து சிறுமியின் தாயார் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து விசாரணை அடிப்படையில் சுந்தரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு அரியலூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுமதி சுந்தரம் எதிரான அனைத்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். விசாரணைகள் முடிவுற்று தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அரியலூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் சுந்தரத்திற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.