கரூர் அருகே உள்ள தொழிற்பேட்டை பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்வதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில், தனிப்படை குழு அமைக்கப்பட்டு கடந்த 18-ம் தேதி 3 பெண் புரோக்கர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த விவகாரத்தில், சம்பந்தப்பட்டிருப்பதாக காந்திகிராமம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மோகன் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.