Skip to content

சிறுகனூர் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் நிலை காவலர் களுக்கான தமிழ் எழுத்துத் தேர்வு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் நடத்தும் 3359 காலி பணியிடங்களின் இரண்டாம் நிலை காவலர்கள்,சிறைத்துறை காவலர்கள்,

தீயணைப்பாளர்களுக்கான தமிழ் எழுத்துத் தேர்வு மற்றும் முதன்மைத் எழுத்துத் தேர்வு  நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர்கள்

( ஆயுதப்படை மற்றும்  சிறப்புகாவல்படை ),

இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்

களுக்கான தமிழ் எழுத்துத் தேர்வு மற்றும் முதன்மைத் எழுத்துத் தேர்வு நடத்தி வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறை காவலர்கள், தீயணைப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு இன்று தமிழ் எழுத்துத் தேர்வு மற்றும் முதன்மைத் எழுத்துத் தேர்வு  தமிழகம்  முழுவதும் நடைப்பெற்று வருகிறது. இதில் 3359 காலிப்பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் ஏராளமானோர் தேர்வு எழுதி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் சமயபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் சிறுகனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி என இரண்டு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதில் 5594 ஆண்களும்,

1777 பெண்களும் என மொத்தம் 7371 தேர்வு எழுதுகின்றனர். சிறுகனூரில் உள்ள  தனியார் பொறியியல்  கல்லூரி மையத்தில் நடைபெற்ற தேர்விற்கு லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் போலீசார் தேர்வு எழுத வந்தவர்களுக்கு  கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிர  பரிசோதனைக்கு பிறகு  தேர்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர் மேலும் மூன்று கட்டமாக இந்த பரிசோதனைகள் நடைப்பெற்றது. தேர்வு எழுத வந்தவர்களுக்கு அடையாள அட்டை, ஹால் டிக்கெட் ,மற்றும் பேனா மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஷூ அணிவது உள்ளிட்ட  மற்ற எந்த பொருள்களையும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும்  இந்த தேர்வு மையங்களில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) முனைவர் பிரபாகர் நேரடியாக சென்று தேர்வு மையங்களை ஆய்வு செய்து  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *