திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 18 நபர்களில் பிரபல ரவுடி சீர்காழி சத்யா(35) என்பவரும் ஒருவர். மயிலாடுதுறையில் டெலிபோன் ரவி என்பவரை கொலை செய்த வழக்கில் இவர் குற்றவாளியாவார், சத்யா நீதிமன்றத்தில் சரிவர ஆஜராகாததால் வழக்கு விசாரணை தள்ளிப் போனது,
சிறையிலிருந்த சத்யா கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பு ஜாமீனில் வெளியேவந்தபோது, ராமஜெயம்வழக்கில் விசாரிக்கப்பட்டுவந்த நிலையில் பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜராகவில்லை, நன்னிலம் மற்றும் காரைக்கால் நீதிமன்றங்களில் சத்யாமீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2022ம் ஆண்டு முதல் தொடர்ந்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் சத்யாமீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது அதற்காக சத்யா மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சத்யாமீது மயிலாடுதுறை மாவட்டத்தில் கொலை வழக்கு உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது, இவர்மீது தமிழகம் முழுவதும் 5 கொலை வழக்கு, 4 கொலைமுயற்சி வழக்கு, உள்ளிட்ட 32 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சத்யா மீண்டும் ஆஜராகமல் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அரசு வழக்கறிஞர் டாக்டர் ராமசேயோன் மற்றும் காவல்துறையினர் கடுமையான ஆட்சேபத்தை எழுப்பினர், சத்யாவிற்கு ஆதரவாக வெளியூரிலிருந்து வழக்கறிஞர் குழுவினர் ஆஜர் ஆகி வாதாடினார்கள். இருந்தும் சத்யாவை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி கந்தகுமார் உத்தரவிட்டார், சத்யாவை மயிலாடுதுறை போலீசார் அழைத்துச் சென்று நாகை கிளைச் சிறையில் அடைத்தனர்.