மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பழைய வாய்ந்த சட்டநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மே மாதம் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக கோவிலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது,இந்நிலையில் யாகசாலை அமைப்பதற்காக மண் எடுக்க கோயில் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோன்டியபோது 2 அடியில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர்,முருகர்,வள்ளி,தெய்வானை, சோமஸ்கந்தர்,அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகளும்,அரை அடி முதல் 2 அடி உயரம் உடையது,மேலும் 100க்கும் மேற்ப்பட்ட திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற
சீர்காழி பதிகம் தாங்கிய தேவார செப்பேடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. அதனை தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரம்மாசாரியர் நேரில் பார்வையிட்டு அவைகள் எந்த காலத்துக்குரிய சிலைகள் என கேட்டறிந்தார், இதுவரையில் இதுபோன்று எங்கும் கிடைக்காத வகையில் ஒரே இடத்தில் 22 சிலைகளும் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் சீர்காழி பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது,இதனை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.
பூமிக்கு அடியிலிருந்து கிடைத்த சிலைகள். செப்பேடுகள் அனைத்தும் பாதுகாப்பாக சட்டநாதர் ஆலயத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி அதனுடைய சாவியை வட்டாட்சியர் செந்தில்குமார் எடுத்துச் சென்றுள்ளார் ,சென்னையிலிருந்து தொல்லியல் துறையினர் வர இருக்கின்றனர் அவர்களது ஆய்வுக்கு பின் சிலைகளின் தொன்மை, மதிப்பு பற்றிய முழு விவரம் தெரிய வரும்.
600 ஆண்டுகளுக்கு முன்னர் முகாலய மன்னர்கள் படையெடுப்பின்போது விலைமதிப்பற்ற சிலைகளை பாதுகாக்க அவற்றை பூமிக்கு அடியில் புதைத்து வைக்கும் பழக்கம் பக்தர்களிடம் இருந்தது. அதுபோல இவற்றை பக்தர்கள் மறைத்து வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.