மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த மாதம் 27-ம் தேதி பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சீர்காழி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த மதன்குமார், அவரது சகோதரர்கள் சுரேஷ், மணிகண்டன். ஆகிய மூவரையும் மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த சீர்காழி போலீசார் ராஜா(எ) பூரணச்சந்திரன், விக்னேஷ், வினோத்குமார், குற்றாலீஸ்வரன், அருண்குமார். செந்தில்குமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த கொலை முயற்சி சம்பவம் போலீசாரின் மெத்தன போக்கால் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி மீனா, சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமாரை ஆயுதப்படைக்கும்,உதவி ஆய்வாளர்கள் அசோக்குமார், சீனிவாசன், சதீஷ்குமார், ராஜாஜி, ஏட்டு குலோத்துங்கண் காவலர் அகஸ்டின் உள்ளிட்ட 7 பேரை அதிரடி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்