Skip to content
Home » சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு விரைவு பேருந்து பயணிகள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது சீர்காழி அருகே பாதரகுடி என்ற இடத்தில் உள்ள புறவழிச்சாலை ஓரத்தில் பழுதடைந்து ஒரு  டேங்கர் லாரி நின்று கொண்டிருந்தது.

இந்த லாரி நாகை மாவட்டம் நரிமணத்திலிருந்து குருடு ஆயில் ஏற்றி கொண்டு சென்னை சென்று கொண்டிருந்தது.திடீரென டேங்கர் லாரி பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்தது அப்பொழுது லாரியின் பின்னால் அதிக வேகத்தில் வந்த அரசு பேருந்து டேங்கர் லாரி மீது மோதி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து  ஓடியது.

அப்போது எதிரே சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த இருசக்கர வாகனத்தில்  அரசு பஸ் மோதியது. இரு சக்கரவாகனத்தில்  சிதம்பரம் பள்ளிப்படை பகுதி சேர்ந்த குருக்கள் பத்மநாபன் அவரது மகன் அருள்ராஜ் மற்றும் பாலமுருகன் ஆகிய மூன்று பேர் வந்தனர். 3 பேர் மீதும் பஸ் மோதியதில் அவர்கள் பஸ்சுக்கு அடியில் சிக்கி அந்த இடத்திலேயே இறந்தனர்.

மேலும் பேருந்து முன் பகுதி டேங்கர் லாரியில் மோதி முற்றிலும் பலத்த சேதமடைந்தது இதில் முன் பகுதியில் அமர்ந்திருந்த நடதுநர் சீட்டுடன் தூக்கி சாலையில் வீசப்பட்டு  கிடந்தார் உடனடியாக அவரை  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். நடத்துநர்  பெயர் விஜயசாரதி., திருவண்ணாமலையை சேர்ந்தவர்.

பஸ் டேங்கர் லாரியில் மோதியதில் பஸ்சின் முன்பக்க சீட்டுகளில்  பயணித்த  25 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம்   சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு  சிகிச்சை  அளிக்கப்படுகிறது.

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிக்காக சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது இதனால் சாலை முழுவதும் பழுதடைந்தும் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு இரு பக்கம் வரக்கூடிய பேருந்துகள் ஒரே சாலையில் சென்று வருகிறது, சாலைகள் போடும் பணியால் மின்விளக்கு இல்லாமல் இருளில் சாலை எது என தெரியாத அளவில் இருட்டு பகுதியாக உள்ளதால் டேங்கர் லாரி பழுதடைந்து நின்றது தெரியாமல் அரசு பஸ் இந்த விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார், இறந்தவர்களின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது,மேலும் பலத்த காயமடைந்தவர்கள் அனைவரும் சீர்காழி அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் விபத்தில் சிக்கியவர்களை தமுமுக ஆம்புலன்ஸ், 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மூலமாக விரைந்து மீட்டு சிகிச்சையில் சேர்த்தனர்

விபத்து தொடர்பாக சீர்காழி டி.எஸ்.பி லாமேக் வழக்குபதிவு செய்து பேருந்து ஓட்டுநர் பழனியை சேர்ந்த பிரதாப் மற்றும் லாரி ஓட்டுநர் கேரளாவை சேர்ந்த ஜான்பியர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்மேல்சிகிச்சைக்காக 5 பேர் சிதம்பரம் மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்

மேலும் லாரியின் பின் பகுதி உடைந்து குருடாயில் வெளியே சாலையில் ஊற்றி கொண்டிருப்பதால் தீயணைப்பு துறை தீ பற்றி கொள்ளாமல் இருக்க நுரை தண்ணீரை அடித்து பாதுகாத்து வருகின்றனர்இதனால் மயிலாடுதுறை – சிதம்பரம் செல்லும் போக்குவரத்து மாற்று பாதையில் அனுப்பட்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!