மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் நடராஜன், ஓய்வுபெற்ற ரயில்வே போலீஸ்காரர். இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீடு புகுந்து 50 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து நடராஜன் சீர்காழி போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் சீர்காழியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
