எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் மோதல் போக்குடன் செயல்படுகிறார்கள் . இது தொடர்பாக பெரும்பாலான மாநிலங்கள் கவர்னர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடாந்துள்ளது. அந்த வகையில் கேரள கவர்னர் ஆரீப் முகமது கான், அந்த மாநிலத்தை ஆளும் மார்க்சிய கம்யூனிஸ்ட் முதல்வர் பினராயி விஜயனுடன் மோதல் போக்கிலேயே உள்ளார்.
இந்த வருடத்தின் முதல் சட்டமன்ற கூட்டம் இன்று காலைதொடங்கியது. இதில் அரசின் திட்டங்களை கவர்னர் படிப்பது மரபு. இதற்காக சரியாக 9 மணிக்கு சட்டமன்றத்திற்கு கவர்னர் ஆரீப் முகமது கான் வந்தார் . அவையில் உள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அறிக்கையின் கடைசி பக்கத்தில் உள்ள கடைசி பத்தியை மட்டும் கவர்னர் படித்தார். பின்னர் அவையில் இருந்து சென்றுவிட்டார். நான் அறிக்கையின் கடைசி பத்தியை படிக்கப்போகிறேன் என்று தெரிவித்து படித்து முடித்தார். இதற்கு அவருக்கு 1.17 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது. 1.17 நிமிடங்களில் ஆளுநர் உரை முடிந்ததால் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.