சசிகலாவிற்கு என கூறப்பட்ட நிலையில் அமமுக தலைவர் பதவிக்கு தேர்தல்...

By செந்தில்வேல் – August 15, 2022

4500

Share E-Tamil Newsசென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் துணை தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினர். இதில் 16 தீர்மானங்கள் நீரைவேற்றப்பட்டன. பொதுக்குழு கூட்டத்தில், அமமுகவுக்கு தலைவரை தேர்ந்தெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரறிவாளனை போல மீதமுள்ள 6 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமமுக ஆரம்பிக்கப்பட்ட போது தலைவர் யார்? என கேட்கப்பட்ட போது அந்த பதவியை சசிகலாவுக்காக காலியாக வைத்திருப்பதாக டிடிவி தினகரன் கூறியிருந்தார். இந்நிலையில், சசிகலாவுக்கு என கூறப்பட்ட தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கபட்டு உள்ளது.