வேலூர் டிஐஜி டிரான்ஸ்பருக்கு இன்ஸ்பெக்டர் காரணமா?..

By செந்தில் வேல் – August 14, 2022

4532

Share E-Tamil Newsவேலுார் சரக டி.ஐ.ஜியாக இருந்த ஆனி விஜயா நேற்று திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பணியிடம் ஒதுக்கப்படவில்லை; காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., சத்தியப்பிரியா, கூடுதல் பொறுப்பாக வேலுார் சரக டி.ஐ.ஜி., பணியை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது... ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், மணல் திருட்டு அதிகமாக நடந்து வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, இன்ஸ்பெக்டர் காந்தியப்பனை இடமாற்றம் செய்து, பத்து நாட்களுக்கு முன்பாக, டி.ஐ.ஜி., உத்தரவிட்டார்.  வாலாஜா போலீஸ் நிலையத்துக்கு, இன்ஸ்பெக்டர் சேதுபதி நியமிக்கப்பட்டார். ஆனால் இன்ஸ்பெக்டர் காந்தியப்பன் பணியில் தொடர்ந்ததுடன், புதிய இன்ஸ்பெக்டர் பதவியேற்க அனுமதிக்கவில்லை. இன்ஸ்பெக்டர் காந்தியப்பன் அதிகார வட்டத்தில் பவர்புல்லா இருந்ததாகவும் அவரை மாற்றியதன் அடிப்படையில் டிஐஜி மாற்றப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால்  தனியார் பைனான்ஸ் மோசடி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததால் டிஐஜி மாற்றப்பட்டதாகவும் ஒரு தகவல் உலாவருகிறது..