காமன்வெல்த் பேட்மிண்டன் .... இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை....

By செந்தில்வேல் – August 8, 2022

4482

Share E-Tamil News72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 19 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்று நடந்த பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் மலேசியாவின் திசி யோங் உடன் பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பான இந்த போட்டியில் லக்சயா சென் 19-21, 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை தட்டி சென்றார். 20 வயதே ஆன லக்சயா சென் காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.