திருச்சி சிட்டியில் நாளை குடிநீர் கட்..... எந்தெந்த ஏரியா......?

By Senthilvel v – August 6, 2022

240

Share E-Tamil Newsதிருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் கொள்ளிடம் கிணறு 3 நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான நீருந்து குழாய் குடமுருட்டி பாலம் உறையூர் வழியாக 11 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் கோணக்கரையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகச்செல்கிறது . குழாயின் ஏற்ப்பட்ட பழுதினை சரி செய்திடும் பொருட்டு மாநகராட்சியால் 06.08.2022 அன்று பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால்  கீழ்க்கண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் புத்தூர் பழைய மற்றும் புதிய , உறையூர் பழைய மற்றும் புதிய , பாரதிநகர் , மங்கள நகர் , பாத்திமா நகர் , சிவா நகர் , செல்வா நகர் மற்றும் ஆனந்தம் நகர் ஆகிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு நாளை  07.08.2022 ஒரு தினங்களுக்கு குடிநீர் வீநியோகம் இருக்காது . 08.08.2022 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் நடைபெறும் என்று திருச்சி மாநகராட்சி கமிஷனர் தெரிவித்து உள்ளார். 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies