By senthilvel – August 6, 2022
Share E-Tamil News
திருச்சி அதிமுக(ஓபிஎஸ் அணி) அமைப்பு செயலாளர் வெல்லமண்டி என்.நடராஜன் இன்று வௌியிட்டு உள்ள அறிக்கையில்.......75வது சுதந்திர தின விழா நாடே கொண்டாடும் நிலையில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் செக்கழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வஉசி சிலை உள்ள பகுதியின் சுற்று சுவர்களில் நினைவு நாள் சுவரொட்டி, விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது. மேலும் நுழைவு வாயில் செல்லும் பாதை சரி செய்ய வேண்டும். மற்ற சிலைகளை பராமரிப்பது போல வஉசி சிலை பூங்காவையும் சரியாக பராமரித்து அழகு படுத்துமாறு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் அந்த அறிக்கையில் தொிவித்துள்ளார்.
© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies