திருச்சி சிறைக்கு கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது......

By senthilvel – August 6, 2022

122

Share E-Tamil Newsதிருச்சி மத்திய சிறையில் சிறைவாசிகளை சந்திக்க உறவினர்களுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. குறிக்கப்பட்ட நேரங்களில் சிறைவாசிகளை சந்திக்க  பார்வையாளருக்கு அனுமதி அளிக்கப்படும். அவ்வாறு வரும் உறவினர்களிடத்திலும் சோதனை நடத்தப்படும். அவ்வாறு மத்திய  சிறை அதிகாரி கண்ணன் தலைமையில் சோதனை நடத்திய போது......திருச்சி நொச்சியத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் விக்னேஸ்வரன் (21)என்பவர் தனது நண்பரை பார்க்க வந்திருந்தார். அவரை அதிகாரி சோதனையிட்டார். அப்போது அவர் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. ஜெயிலுக்குள் இருக்கும் தனது நண்பருக்கு கொடுப்பதற்காக கஞ்சா கடத்தி வந்து இருக்கலாம் என கூறப்பட்டது. இதை எடுத்து சிறைத்துறை காவலர்கள் விக்னேஸ்வரனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies