குற்றாலம்....... 5 நாட்களுக்கு பிறகு ஐந்தருவியில் குளிக்க அனுமதி

By senthilvel – August 6, 2022

72

Share E-Tamil Newsதென்காசி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த 5 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதல் மழை குறைந்ததால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிதமான அளவில் வந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகிய 4 அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. சீசன் காரணமாக தண்ணீர் அதிகமாக விழுந்தாலும் கடந்த 5 நாட்களாக குளிக்க அனுமதி இல்லாத நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டதாலும், விடுமுறை தினம் என்பதாலும் இன்று ஏராளமானோர் அருவிகளில் திரண்டனர். மெயினருவியில் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies