டி.வி மெக்கானிக்கை வெட்டிக் கொன்றவர் அடித்துக்கொலை.... பட்டபகலில் பயங்கரம்..

By செந்தில்வேல் – August 6, 2022

274

Share E-Tamil Newsதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் தங்கராஜா(41).டி.வி மெக்கானிக்.அதே பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (37). இவர்கள் இருவரும் இன்று பேசிக்‍கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் தான் வைத்திருந்த அரிவாளால் தங்கராஜாவை தாக்கி உள்ளார். இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தங்கராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த கிராம மக்கள், உதயகுமாரை பிடித்து சராமரியாக தாக்கியதில் அவரும் பலத்த காயம் அடைந்தார். நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த இரு சம்பவம் குறித்து நத்தம் போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies