திருச்சி மாவட்ட கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு.....9ம் தேதி கலந்து கொள்ள அழைப்பு

By senthilvel – August 6, 2022

226

Share E-Tamil Newsதமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் 20 வயதுகுட்பட்ட  ஆண்கள் பிரிவினருக்கான  மாநில அளவிலான  48வது ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப்  போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் 19ம் தேதி முதல் முதல்  நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட கபடி அணிக்கான வீரர்கள் தேர்வு 9ம் தேதி செவ்வாய் கிழமை அன்று காலை 8.00 மணி அளவில் திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. தேர்வில் பங்கேற்கும் வீரர்கள் 20/11/2002 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்த இருக்க வேண்டும். வீரர்கள் 70 கிலோ எடை உள்ளவராக இருக்க வேண்டும். தேர்வுக்கு வரும் பொழுது வீரர்கள் ஆதார் கார்டு நகல் அவசியம் கொண்டு வரவேண்டும். தேர்வில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் திருச்சி மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர்  டி. நீலகண்டன் அவர்களை  9524676767 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிந்து கொள்ளலாம். 9/8/2022 அன்று காலை 10.00 மணிக்குள் வராத வீரர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies