இந்தியாவிற்கு மேலும் ஒரு வௌ்ளி...... 5வது இடத்திற்கு முன்னேற்றம்.....

By senthilvel – August 6, 2022

60

Share E-Tamil News72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு தற்போது மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட பந்தயத்தில் இந்தியா வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளி வென்றுள்ளார். அவர் 43.38 நிமிடத்தில் இலக்கை அடைந்து வெள்ளி வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா தற்போது 9 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம் என 28 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.