வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

By செந்தில்வேல் – August 6, 2022

158

Share E-Tamil Newsஇந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:.... மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.நாளை முதல் பெரும்பாலான மாவட்டங்களில், மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது. சென்னையில், இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில் லேசான மழை பெய்யும். தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடையும் நிலையில், வங்க கடலின் மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியை ஒட்டி, நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது வலுவடைந்து, வங்க கடலின் வட மேற்கு மாநிலங்களில் கன மழையை பெய்ய வைக்கும். 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies