பிரபல நடிகை சென்ற கார் விபத்து... நடிகைக்கு தீவிர சிகிச்சை....

By செந்தில்வேல் – August 6, 2022

18

Share E-Tamil Newsஅமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1997 மற்றும் 1998 ஆகிய காலகட்டங்களில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் ஆனி ஹெச். எம்மி விருதுகள் வென்ற புகழ்பெற்ற நடிகையான ஆனி ஹெச் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நேற்று தனது காரில் பயணித்தார். அப்போது மார் விஸ்டா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது கார் மோதியதில் தீப்பிடிக்க தொடங்கியது. அதில் நடிகை ஆனி ஹெச் பலத்த காயமடைந்தார்.இந்த கொடூர விபத்தின் போது, வீட்டின் உரிமையாளர் வீட்டின் பின்புறத்தில் இருந்ததால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம்பக்கத்தினர் கூறுகையில், "வீடு முழுவதும் புகை மூட்டமாக இருந்தது. தீயணைப்பு வீரர்கள் காரை நகர்த்துவதற்கு, கிரேன் மூலம் காரை அப்புறப்படுத்தினர்" என்று கூறினர்.ட்டத்தட்ட 60 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கார் உடனடியாக தீப்பற்றி எரிந்தது. காருக்குள் சிக்கிக்கொண்ட அணி வெளியேற முடியாமல் தீயில் சிக்கிக்கொண்டார்.எனினும் அந்த காரை ஆனி தான் ஓட்டிச் சென்றார் என்பது இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அப்பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் காரின் பின்புறத்தில் இருந்து ஆனி ஹெச்சை மீட்ட்தாக கூறினர். நடிகை மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டினாரா என்பது மருத்துவ அறிக்கையின் முடிவில் தெரியவரும். இந்த விபத்துக்கு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies