நடிகை மீது சினிமா பாடலாசிரியர் சினேகன் பரபரப்பு புகார்....

By செந்தில்வேல் – August 6, 2022

172

Share E-Tamil Newsசென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா பாடலாசிரியர் சினேகன் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது;- நான் அறக்கட்டளையை கடந்த 23.12.2015 முதல் நடத்தி வருகிறேன். எனது அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் பல சேவை திட்டங்களை சிறப்பாக சட்டத்திற்கு உட்பட்டு, எந்தவித புகாருமின்றி செய்து வருகிறேன். சமீப காலமாக எனது அறக்கட்டளை பெயரை சின்னத்திரை நட்சத்திரம் மற்றும் வழக்கறிஞருமான ஜெயலட்சுமி தவறாக பயன்படுத்தி வருகிறார். எனது அறக்கட்டளை பெயரில் தவறான முகவரி கொடுத்து இணையதளத்தில் தான்தான் 'சினேகன் அறக்கட்டளை'நிறுவனர் 

Complaint filed against Actress and BJP member Jayalakshmi in Fraud and  death threat case | பா.ஜ.க-வை சேர்ந்த நடிகை மீது பரபரப்பு புகார்: கொலை  மிரட்டல் விடுத்தாரா? | Tamil Nadu News in Tamil

என்று கூறி இணையதளம் நிதி வசூலித்ததாக பல புகார்கள் வந்தது. நான் பொதுமக்களிடம் பொது வெளித்தளங்கள் மூலம் இதுவரை எந்த நிதியும் திரட்டவில்லை. ஜெயலட்சுமி எனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நிதி வசூலித்ததாக வருமான வரித்துறை எனது கவனத்துக்கு கொண்டு வந்தார்கள். இதுதொடர்பாக வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினால் அது தவறான முகவரி என்று திரும்பி வந்துவிட்டது. எனவே, எனது அறக்கட்டளையை இயக்குவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து பணத்தை பறிக்கும் ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு செய்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். மேலும், அந்த போலியான இணைய தளத்தை முடக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies