திருச்சியில் அதிரடி வேட்டை... கஞ்சா-குட்கா பறிமுதல்... 14 பேர் கைது.... மாவட்ட க்ரைம்....

By செந்தில்வேல் – August 6, 2022

136

Share E-Tamil Newsகடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு.... திருச்சி ,மணப்பாறை வெள்ளைபூலாம்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் துரைராஜ்(46). இவா் ஆர்எஸ்ஆர் டிரேடர்ஸ் என்ற கடையை நடத்தி வருகிறார். இவா் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும்  கடையை திறக்க வந்தபோது கடையின் பின்பக்க இரும்பு கதவை உடைத்து 70ஆயிரம் பணம், 5ஆயிரம் மதிப்புள்ள டிவிஆர் யூனிட் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.  அதிர்ச்சியடைந்த துரைராஜ் மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.


பட்டாக்கத்தியால் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது... திருச்சி மண்ணச்சநல்லூர் சிறுகாம்பூர் பகுதியை சோ்ந்தவா் சரத்குமார்(32). இவா் நேற்று சிறுகாம்பூர் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து புக்காத்துரை வயல்நெய்வேலி கிராமத்தை சோ்ந்த சந்துரு(33), ரஞ்சித்(27) ஆகிய 2 பேரும் சரக்கு வாங்கி கொண்டு வந்தபோது நடந்து வந்து கொண்டிருந்த சரத்குமார் மீது ரஞ்சித் தடுமாறி விழுந்துள்ளார். இதுக்குறித்து சரத்குமார் கேட்டுள்ளார். அதற்கு ரஞ்சித்,சந்துரும் சேர்ந்து கொண்டு சரத்குமாருடன் தகராறு செய்துள்ளனர். மேலும் அவா்கள் பட்டாகத்தியால் சரத்குமாரை தாக்கியுள்ளனா். இதனை தொடர்ந்து சரத்குமார் வாத்தலை போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து, சந்துரு, ரஞ்சித் ஆகிய 2 பேரையும்  கைது செய்தனா்.


திருச்சி மாவட்டத்தில் கடைகளில் குட்கா விற்ற 14 பேர் கைது.... திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த சோதனையில் மளிகை கடை, டீக்கடை, உள்ளிட்ட இடங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட ஹானஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அதனை விற்பனை செய்த 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.


லாட்டரி சீட்டு பறிமுதல்.... திருச்சி, மருங்காபுரி பஸ் ஸ்டாண்ட் அருகே லாட்டரி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் துவரங்குறிச்சி போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது துவரங்குறிச்சி மீனாட்சி அம்மன் கோவில் தெருவை சோ்ந்த மாணிக்கம் என்பவா் அப்பகுதியில் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்தனர்.  மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டு எண்கள் அடங்கிய பேப்பா்கள் -பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


மணல் கடத்தல்... உரிமையாளர் கைது... திருச்சி, தொட்டியம் மகேந்திரமங்கலம் பகுதியில் உள்ள பழைய மணல் குவாரி ரோட்டில்  போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த டாடா வேனை சோதனை செய்ததில் அதில் சட்டத்திற்கு புறம்பாக 1 யூனிட் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வண்டியை பறிமுதல் செய்ததோடு, அதன் உாிமையாளா் வாஞ்சிநாதன்(35) என்பவரை போலீசார் கைது செய்தனா். மேலும் அவருடன் இருந்த சேலம் மாவட்டம் குமார்(40), சரண்ராஜ்(28) என்ற 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனா்.


கஞ்சா விற்பனை செய்தவர் கைது.... மாருதி கார் பறிமுதல்... திருச்சி, துறையூர் ஆத்தூர் சாலை லட்சுமி மெஸ்க்கு அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் துறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அ டிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர்.  அப்போது பச்சபெருமாள்பட்டி கிராமத்தை சோ்ந்த அருண்குமார்(28) என்ற வாலிபா் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்தனர். மேலும்  அவரிடம் இருந்து 2கிலோ கஞ்சா - ஒரு மாருதி கார் பறிமுதல் செய்தனர்.

மேலும்  திருச்சி, முசிறி பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முசிறி காவல்துறையினா் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அங்கு இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த தொட்டியம் அரசலூர் பகுதியை சோ்ந்த வசந்த்(23), திருநாராயணபுரம் பகுதியை சோ்ந்த ராகுல்(23), வடுகா் தெருவை சோ்ந்த கோகுல்நாத்(19) ஆகிய 3 பேரை காவல்துறையினா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் பல்சர் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து திருச்சி  லால்குடி புள்ளம்பாடி தைலக்குளம் பின்புறத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்லக்குடி போலீசார்  ரகசியமாக சோதனை செய்தனர். அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த புள்ளம்பாடியை சோ்ந்த கார்த்திக்(26), சேசாயி(52) என்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனா்.  மேலும் அவா்களிடமிரு்நது 1.5கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து திருச்சி, ராம்ஜிநகா் பச்சை நாச்சியம்மன் கோவில் பின்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பாஸ்கா்(42) என்பவரை ராம்ஜிநகா்  போலீசார் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1கிலோ 200கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் அவரை கைது செய்தனா். 

அதேபோல் புங்கனூர் காந்திநகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மாயக்கிருஷ்ணன் (38) என்பவரை ராம்ஜிநகா் போலீசார் கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.... திருச்சி மாவட்டம், சா்க்கார்பாளையம் ஏஆர்கே நகா் பகுதியில் உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்அழுகிய நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பனையக்குறிச்சி விஏஓ அன்பழகன் திருவெறும்பூா்  போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின்  அடிப்படையில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி  வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.