காமன்வெல்த் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம்..

By செந்தில் வேல் – August 6, 2022

4436

Share E-Tamil News22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. நேற்று அரங்கேறிய ஆண்களுக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் பஜ்ரங் பூனியா 9-2 என்ற புள்ளி கணக்கில் கனடாவின் லாச்லன் மெக்நீலை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான 28 வயதான பஜ்ரங் பூனியா அரியானாவைச் சேர்ந்தவர் ஆவார். இதே போல் பெண்களுக்கான மல்யுத்தத்தில் 57 கிலோ எடைபிரிவில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 3-7 என்ற கணக்கில் 2 முறை சாம்பியனான ஒடுனயோ போலாசட்விடம் (நைஜீரியா) தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். இதன் 62 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக் ஷி மாலிக் கனடாவின் கோடிநெஸ்சை வீழ்த்தி தங்கமங்கையாக உருவெடுத்தார். 0-4 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்த சாக்‌ஷி மாலிக்கு அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு எதிராளியை சாய்த்தார். இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்த மற்றொரு வீரரான தீபக் புனியா இந்தியாவுக்கு 9-வது தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ளார். ஆடவருக்கான ப்ரீஸ்டைல் 86 கிலோ பிரிவில் தீபக் புனியா 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானின் முஹம்மது இனாமைத்தை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார். அடுத்து நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் இந்தியாவின் திவ்யா கக்ரன் மற்றும் மோஹித் கிரேவால் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்தினர். முன்னதாக மல்யுத்தம் நடந்த இடத்தில் மேற்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஸ்பீக்கர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பிரச்சினையும், குழப்பமும் நிலவியதால் போட்டிகள் தொடங்குவதில் 2 மணி நேரம் தாமதம் ஆனது. பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா 50 தங்கம், 44 வெள்ளி, 46 வெண்கலம் என்று மொத்தம் 134 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என்று 26 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.