By senthilvel – August 5, 2022
Share E-Tamil News
தமிழகத்தில் தொன்மையான சிலைகள் திருடி வௌிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்பவர்களை தடுத்து நடவடிக்கை எடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்தது. திருச்சி மாவட்டம் உறையூர் பகுதிழயில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெண் சாமி சிலை பதுக்கி வைத்து 2 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனைக்கு முயற்சி நடைபெறுவதாக தனிபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சிலையை வாங்கி வௌிநாட்டிற்கு கடத்தி செல்பவர்களை போல போனில் பேசிய போலீசார் சிலை வைத்திருப்பவர்களை திருச்சி கிராப்பட்டி ரோடு நான்கு வழிச்சாலை சந்திப்பிற்கு வரச்செய்து அங்கு வந்த நான்கு பேரையும் சுற்று வளைத்து பிடித்து அவர்களிடம் இருந்து 1 அடி உயரமுள்ள உலோக சிறையை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்..... சிவகங்கை திருப்பத்துார் கிளாமடத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர், குறி சொல்லும் தனது தந்தை வைத்திருந்த சிலையை, அவர் இறந்த பின்னர் விற்பனை செய்வதற்காக திருச்சி உறையூர் மேட்டுத்தெருவை சேர்ந்த முஸ்தபா(32) என்பவரிடம், பல கோடி பெறுமானம் பெறும், இதனை விற்று பங்கு பிரித்துக்கொள்ளலாம் என்று கூறி
கொடுத்துள்ளார். இந்த சிலை விற்பனை தொடர்பாக துாத்துக்குடி சாத்தான்குளம் படுக்கபத்து ஆறுமுகராஜ்(56), இடச்சிவிளை குமரவேல்(32) ஆகிய புரோக்கர்கள் துணையுடன் விற்பனை செய்ய முயன்றது தொியவந்துள்ளது. இதனை தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies