மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு....

By செந்தில்வேல் – August 5, 2022

152

Share E-Tamil Newsபிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென்னை திடீரென கொல்கத்தா விமான நிலையத்தில் மமதா பானர்ஜி சந்தித்து பேசினார். அப்போது ஜசோதாபென்னுக்கு சேலை ஒன்றை பரிசாக அளித்தார் மம்தா பானர்ஜி. இந்நிலையில் இன்று மாலை டில்லியில் பிரதமர் மோடியை

மோடியிடம் 3 கோரிக்கைகள்

அவரது இல்லத்தில் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மேற்கு வங்கத்துக்கு நிதி ஒதுக்கீடு, தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் இச்சந்திப்பின் போது பிரதமர் மோடிக்கு குர்தா ஒன்றை பரிசாக வழங்கினார்.  இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மமதா பானர்ஜி கூறியதாவது: பிரதமர் மோடியுடனான இப்பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. பிரதமர் மோடியிடம் மேற்கு வங்கம் தொடர்பாக 3 கோரிக்கைகளை முன்வைத்தேன். மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என மாற்றுவது குறித்தும் மோடியுடன் ஆலோசனை நடத்தினேன். மேற்கு வங்கத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ரூ13,000 கோடி முதலீடு செய்யபட உள்ளது என்று இவ்வாறு தெரிவித்தார்.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies