அண்ணன் பாம்பு கடித்து பலி... இறுதி சடங்கிற்கு வந்த தம்பியும் பாம்பு கடித்து பலி...

By செந்தில்வேல் – August 5, 2022

392

Share E-Tamil Newsஉ.பி மாநிலம், பவானிபூர் கிராமத்தில் வசித்து வந்தவர்  அரவிந்த (38). இவர் கடந்த செவ்வாய்கிழமை பாம்பு கடித்து உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த அண்ணன் இறுதி சடங்கிற்கு  சகோதரர் கோவிந்த் மிசாரா(22) பவானிபூர் கிராமத்திற்கு வந்துள்ளார். அடுத்த நாள் புதன்கிழமை இறுதி சடங்கில் பங்கேற்று விட்டு தன்னுடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது கோவிந்த் மிசாராவையும் பாம்பு கடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் வீட்டில் தங்கியிருந்த உறவுக்காரர் சந்திரசேகர் என்பவரையும் பாம்பு கடித்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மருத்துவ மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த  கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம்  பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.