காமென்வெல்த் போட்டிகள்... இந்தியாவுக்கு 6-வது தங்கம்..

By செந்தில் வேல் – August 5, 2022

88

Share E-Tamil News



22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது. 7-வது நாளான நேற்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுதிர், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றார். அவர் பாரா-பளுதூக்குதலில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை தனது பெயரில் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். காமன்வெல்த் போட்டியில் அவர் மொத்தம் 134.5 புள்ளிகளை பெற்ற நிலையில் தங்கப்பதக்கத்தை தன் வசப்படுத்தினார். இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.