மீண்டும் இடியும் திருச்சி கொள்ளிடம் பாலம்...

By senthilvel – August 4, 2022

4520

Share E-Tamil Newsதிருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1928ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இரும்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் வலுவிழந்து வந்த நிலையில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பழைய கொள்ளிடம் இரும்பு பாலத்தில் 18வது துாணில் பெரிய விரிசல் ஏற்பட்டு அடுத்தடுத்து துாண்கள் இடிந்து விழுந்தன. இந்த பழைய பாலத்தை முற்றிலுமாக அகற்றுவதற்கு தமிழக அரசு 3.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த பாலத்தின் 20ம் எண் துாண் தற்போது தண்ணீரில் மூழ்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக இந்த துாண் இடிந்து விழும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அவ்வாறு இடிந்து விழும் பட்சத்தில் புதிய பாலம் வலுவிழக்கும் அபாயம் உள்ளது.