திருச்சியில் வெடிகுண்டு பறிமுதல்..... அதிமுக பிரமுகர் மகன் கைது

By senthilvel – August 4, 2022

548

Share E-Tamil Newsதிருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி கேபிள் சேகர் என்பவரின் மகன் முத்துக்குமார்(29). இவரது வீட்டில் கொலை திட்டத்திற்காக கையெறி குண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் முத்துக்குமாருக்கு சொந்தமான  கொடி காத்த குமரன் தெருவில் உள்ள வீட்டில்,  திருச்சி மாநகர துணை கமிஷனர்  ஸ்ரீதேவி, பொன்மலை உதவி கமிஷனர்  காமராஜ், வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் எட்வர்டு, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி, தடய அறிவியல் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட போலீஸ் டீம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது ஆணி, பால்ரஸ், வெடி மருந்துடன் தயாரிக்கப்பட்ட ஒரு கிலோ எடை கொண்ட கையெறி  வெடிகுண்டுகள் போலீசாரின் சோதனையில் கைப்பற்றப்பட்டு

உள்ளது.மேலும் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறும் வெடிகளும் கைப்பற்றப்பட்டு உள்ளது. கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகள் பாதுகாப்புடன் போலீசார் எடுத்து சென்றனர்.  இது தொடர்பாக அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனர்.  மேலும் இந்த வழக்கு தொடர்பாக கீழ அம்பிகாபுரம் காவிரி நகர சேர்ந்த சேகர் மகன் சரவணன், குட்ட பாலு, கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர். அதிமுக நிர்வாகியின் வீட்டில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகரை சேர்ந்த பெரியசாமி மனைவி பார்வதி கொடுத்த புகாரின் பேரில் முத்துக்குமார் ,சரவணன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சிட்டியில் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies