அலறிய மைக்..... திருச்சி சிட்டி போலீஸ் கண்ணில் மண்ணை துாவி பறந்து சென்ற வாலிபர்.....

By senthilvel – August 4, 2022

438

Share E-Tamil Newsதிருச்சி ஜிஎச்சில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் காணாமல் போவது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக திருச்சி ஜிஎச் முழுவதும் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். ஜிஎச் பிரதான வாயிலில் வாகன கண்காணிப்பில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்த போது TN 55 477 என்ற எண்ணும் வேதா என்று எழுதப்பட்ட இருசக்கர வாகனத்தில் நீல சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் வந்துள்ளார். வாகன சோதனைக்காக அவரை நிறுத்த சொல்லி பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைகாட்டி உள்ளார். ஆனால் போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் படு ஸ்பீடாக இருசக்கர வாகனத்தை விரட்டி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து மைக்கில் அலார்ட் செய்யப்பட்டது. இதன் காரணமாக கோர்ட் பகுதியில் போலீசார் அந்த வாலிபரை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் பீமநகரை நோக்கி பறந்து சென்றுள்ளார். போலீசாரும் மைக்கில் அவர் சென்ற ரூட்டை சொன்னபடி துரத்தி சென்றுள்ளனர். ஆனால் மேலப்புதுார் சென்ற வாலிபர் அதன் பின்ன போலீசாரின் கண்களில் இருந்து மாயமாகி உள்ளார். பறந்து சென்ற வாலிபர் இருசக்கர வாகன திருடனா, அல்லது போலீசை கண்டதும் பயந்து போனவரா? என்பது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies