காமன்வெல்த் போட்டி.. கலப்பு பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வெள்ளி...

By செந்தில் வேல் – August 3, 2022

34

Share E-Tamil Newsஇங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் கலப்பு பேட்மிண்டன் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி சிங்கப்பூரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்த்து இன்று விளையாடியது. இந்நிலையில், இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. மலேசிய அணி தங்கப்பதக்கம் வென்றது. இந்த பதக்கத்தையும் சேர்த்து இந்திய அணி 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies