வங்கிகள் திண்டுக்கலுக்கு ஒகே... ஓபிஎஸ் அப்செட்...

By செந்தில் வேல் – July 20, 2022

4438

Share E-Tamil Newsசென்னையை வானகரத்தில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அந்த கூட்டத்தில் பொருளாளராக இருந்த ஓபிஎஸ் நீக்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசன் புதிய அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டதாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் அடிப்படையில் பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி அதிமுக வங்கி கணக்குகள் உள்ள கரூர் வைஸ்யா, இந்தியன் வங்கி மேலாளர்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கடிதம் எழுதி எழுதியிருந்தார். அதில் அதிமுக கட்சி தொடர்பான வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என்றும், செக்குகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவரே மேற்கொள்வார் எனவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்சும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்குக் எழுதிய கடிதத்தில், என்னைக் கேட்காமல் வங்கி வரவு செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது.நான்தான் கட்சியின் பொருளாளராக தொடர்கிறேன். கட்சியின் விதிகளை மீறி நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்தது செல்லாது. மேலும் இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது. எனவே அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இபிஎஸ் தரப்பு ஆவணங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஓப்புதலின் அடிப்படையில் இந்த முடிவுவினை  வங்கிகள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கி முடிவுகளின் இந்த ’முடிவு ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது..  

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies