அது வேறமாறி..இது வேறமாறி.. சிக்கலில் ஜோதிமணி எம்பி..

By செந்தில் வேல் – July 10, 2022

4454

Share E-Tamil News பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை தேர்ந்தெடுத்து ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு உண்டு. அவ்வாறு 12 பேரை எம்பிகளாக நியமனம் செய்யலாம். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த ‘இசைஞானி இளையராஜாவிற்கு ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து, பாரத பிரதமர் நரேந்திர மோடி, திரை உலக பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பலர் இளையராஜவிற்கு தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். திருச்சி எம்பி திருநாவுகரசர் கூட .இளையராஜாவுக்கு வாழ்த்துகளை கூறியிருந்தார். இந்த நிலையில் தான், கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, இசைஞானி இளையராஜாவுக்கு கூறிய வாழ்த்து செய்தி சர்ச்சையாகியிருக்கிறது... மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள். இசையின் தேவதூதனைக் கூட பா.ஜ.க தலித் என்கிற சாதிய அடையாளத்தோடுதான் பார்க்கும். தயவு செய்து மதம், சாதி தாண்டி மனிதர்களையும், அவர்கள் சாதனைகளையும் பாருங்கள். இந்த மண்ணில் அமைதி நிலவும். என தனது டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

அதே ஜோதிமணி மணி எம்பி கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக சன்னி நியமனம் செய்யப்பட்ட போது தனது டிவிட்டரில் ..  இது ஒரு முடிவு அல்ல ஆரம்பம் தான், காங்கிரஸ் வேண்டுமானால் உத்தர பிரதேசத்தில் தோல்வியை தழுவி இருக்கலாம். ஆனால், தலித் மிஷனில் ராகுல் காந்தி வெற்றி பெற்று விட்டார். வாழ்த்துக்கள் சன்னி சார் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரே முதல்வர் நீங்கள். சமூக நீதி மற்றும் தலித் சமூகத்திற்கான உறுதியான தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி மீண்டும் நிருபித்துள்ளது. சரியான தேர்வினை செய்த ராகுல் காந்தி அவர்களுக்கும் பஞ்சாப் மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்... இந்த இரண்டு டிவிட்டர்களை சேர்த்து பதிவு செய்துவரும் நெட்டிசன்கள்... ஏன் மாற்றி மாற்றி பேசுகிறீர்கள் என ஜோதிமணி எம்பியை கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர்..