நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகளை நீக்கும் முருங்கைப்பூ....

By செந்தில்வேல் – July 5, 2022

4426

Share E-Tamil Newsமுருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் முருங்கை கீரை சூப் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். 

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
 

ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களை எடுத்து அதில் இரண்டு தேக்கரண்டியளவு அளவு பசு நெய் விட்டு வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலையில் மட்டும் குடித்து வந்தால் ஒரு வாரத்திலேயே உடல் சூடு தணியும்.
 

முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி முருங்கை கீரை பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
 

முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
 

முருங்கை பூவை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடி செய்து காலையில் கஷாயம் போட்டு அதனுடன் பனைவெல்லம் கலந்து குடித்து வந்தால் உடல் வலுவடையும். நரம்புகள் புத்துணர்ச்சி பெரும்.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies