திருச்சியில் சிஎம் வரவேற்பு நிகழ்ச்சி... உளவுத்துறை இன்ஸ்பெக்டர் தள்ளி விடப்பட்டாரா?

By செந்தில் வேல் – July 3, 2022

4462

Share E-Tamil Newsதமிழக முதல்வர் ஸ்டாலின் கரூரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் மாலை சிறப்பு விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்தார்.  அவரை வரவேற்க அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, ரகுபதி, சிவசங்கர், உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாஆசிர்வாதம்,  சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் விமானநிலையம் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை கண்காணிக்க திருச்சி மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டர் பால்சாமியும் சென்றிருந்தாக கூறப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து விட்டு முதல்வர் ஸ்டாலின் தனது வாகனத்திற்கு சென்ற போது பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பால்சாமியை ஒரமா நில்லுங்க எனக்கூறி தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. உடனே இன்ஸ்பெக்டர் பால்சாமி நான் இன்ஸ்பெக்டர் என கூற யாராாக இருந்தா என்ன ஒரமா நில்லுங்க என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்த போலீஸ் அதிகாரிகள் (இன்ஸ்பெக்டர் பால்சாமியை காட்டி) அவர் இன்ஸ்பெக்டர் என கூறியதாவும், அதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை நாங்கள் ஒரமாக நிற்குமாறு கூறினோம் அவர் யோவ் நான் இன்ஸ்பெக்டர் என ஒருமையில் கூறியதாகவும் அதனாலேயே பிரச்சனை ஏற்பட்டதாக கூறியுள்ளனர்... இந்த விவகாரம் தற்போது திருச்சி சிட்டி போலீசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...