By senthil – June 24, 2022
Share E-Tamil News
,இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜூலை மாதம் 18ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கியது. 29ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிகிறது.
இந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பழங்குடி இன தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு (வயது 64) நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று திரவுபதி முர்மு இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனுவை பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் முன்மொழிந்தனர். வேட்பு மனு தாக்கலின் போது அதிமுக சர்பில் ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
5