டூவீலர் பைனான்ஸ்காரருக்கு சரமாரி வெட்டு.... வாலிபருக்கு வலைவீச்சு...

By செந்தில்வேல் – June 24, 2022

110

Share E-Tamil Newsவடசென்னை திருவொற்றியூர்  தெற்கு மாடவீதியில் வசித்து வருபவர் கார்த்திக்.இவர் அதே பகுதியில் டூவீலர்களை பைனான்ஸ் முறையில் விற்பனை செய்து வரும் தொழில் செய்து வருகிறார்.  இந்நிலையில் இன்று காலையில் கார்த்திக் கடையை திறக்க  வந்த போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த செந்தில் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்தியை கொலை செய்யும் நோக்கத்தோடு சரமாரியாக வெட்டியுள்ளார் .  கார்த்திக்கை வெட்டுவதை பார்த்து தடுக்க வந்த பொதுமக்களையும் வெட்ட பாய்ந்துள்ளார் அந்நேரத்தில் அவ்வழியாக ரோந்து பணியில் வந்த போலிசாரை கண்டதும் கத்தியை வீசிவிட்டு செந்தில் தப்பியோடிவிட்டார் .  பின்னர் திருவொற்றியூர் போலிசாரின் விசாரணையில் செந்தில் என்பவர் கார்த்திக்கிடம் மாதம் 15000ரூபாய் ஊதியத்தின் அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார் .அப்போது கடை உரிமையாளர் கார்த்திக்கிடம் இருந்து சுமார் 2 லட்சம் ருபாய் அளவில் மோசடி செய்துள்ளார். இதையறிந்த  காரத்திக் திருவொற்றியூர் காவல் நிலையம் மற்றும் துணை ஆணையர் அலுவலகத்தில் 2 தினங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். நேற்று இருதரப்பையும் விசாரித்த திருவொற்றியூர் போலிசார் மீண்டும் இன்று விசாரணைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது . இந்நிலையில் தன் மீது புகார் கொடுத்த ஆத்திரத்தின் பேரீல் கடையை திறக்க வந்த கார்த்திக்கை செந்தில் சரமாரியாக வெட்டியுள்ளார் என தெரியவந்துள்ளது. அப்பொழுது கார்த்திக்கின் மனைவி மற்றும் அவரது வழக்கறிஞர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வந்து புகார் அளிக்க வந்துள்ளனர் அப்பொழுது செந்தில் தங்களை கொலை செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாக ஏற்கனவே குற்றம் சாட்டிய போதும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கருதி திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்போது திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளருக்கும் வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது மேலும் ஆய்வாளர் வழக்கறிஞரை மிரட்டும் தோணியில் பேசியது அங்கு நின்றவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருவொற்றியூர் போலிசார் தப்பியோடிய செந்திலை தேடிவருகின்றனர்.