திருச்சி பெண் போலீஸ் தற்கொலை முயற்சி.. ரயில்வே ஊழியர் கைது..

By செந்தில் வேல் – June 24, 2022

316

Share E-Tamil Newsதிருச்சியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் பெண் போலீஸ் தனது உறவினரான லால்குடி திருமணமேட்டை சேர்ந்த ரயில்வே ஊழியர் ஸ்டாலின் (40) என்பவருடன் பழகி வந்தார். திருவெறும்பூரில் உள்ள ரயில்வே காலனியில் வசித்து வந்த ஸ்டாலினுடன் பெண் போலீஸ் கடந்த 2 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அப்போது ரயில்வே ஊழியர் ஸ்டாலின் பெண் போலீசை நிர்வாண நிலையில் ஆபாசமாக அவர் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த புகைப்படங்களை காட்டி மிரட்டி, பெண் போலீசுடன் பலமுறை உல்லாசம் அனுபவித்ததுடன், கடந்த 20-ந்தேதி அவரை மிரட்டி ரூ.20 ஆயிரமும் பறித்துள்ளார். இதனால் மனமுடைந்த பெண் போலீஸ் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ரயில்வே ஊழியர் ஸ்டாலின் மீது, பெண்ணை மானபங்க படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.