By செந்தில் வேல் – June 24, 2022
Share E-Tamil News
என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய டைரக்டர் ஜெனரலாக, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி, தின்கர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: பஞ்சாபில், 1987ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வான தின்கர் குப்தா, தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஓய்வு பெறும் வரை, அதாவது, 2024, மார்ச் 31 வரை இப்பதவியை வகிப்பார். தின்கர் குப்தாவின் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.