Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா கூட்டணி 3வது கூட்டம்….மும்பையில் வரும் 31ம் தேதி தொடக்கம்

மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலம் மிக்க  இந்தியா கூட்டணியை காங்கிரஸ், திமுக  உள்ளிட்ட 26 கட்சிகள் அமைத்துள்ளன.இந்த கூட்டணியின்  முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. 2-வது முறையாக பெங்களூருவில் கடந்த 17, 18-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூடி மீண்டும் ஆலோசனை நடத்தின. 26 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் அணிக்கு ‘இந்தியா’ (I.N.D.I.A) என பெயரிடப்பட்டது. அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், இம்மாதம் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெறும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சிவ சேனா உத்தவ் பாலசாஹேப் தாக்கரே கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ” இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி மும்பையில் நடைபெறும். கூட்டம் வெற்றிகரமாக நடைபெறும் என்பதை உறுதி செய்கிறோம்” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!