By senthilvel – June 23, 2022
Share E-Tamil News
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று மிகுந்த பரபரப்புடன் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இருந்து பாதியிலேயே ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் வௌியேறினார். அதனை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை ஓபிஎஸ்சை சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து ஓபிஎஸ் டெல்லி புறப்பட்டார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் எம்பியும் சென்றார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து அவர் புறப்படும் முன்பாக செய்தியாளர்களிடம் டெல்லி பயணம் பற்றி கூறும்போது.......குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாகவும், குடியரசு தலைவர் வேட்பு மனு தாக்கலில் கலந்து கொள்ள பாஜக அழைப்பு விடுத்ததின் பேரில் டெல்லி செல்வதாகவும் அவர் தொிவித்தார்.