By senthilvel – June 23, 2022
Share E-Tamil News
திருச்சி சிவாவின் மகன் சூர்யா. இவர் தற்போது பா.ஜ.,வின் ஓபிசி பிரிவு பொது செயலாளராக உள்ளார். இவர் கடந்த ஜூன் மாதம் தனது காரில் சென்று கொண்டிருந்த போது உளுந்துார்பேட்டையில் கிருஷ்ணா ஆம்னி பேருந்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் சூர்யாவின் கார் சேதமடைந்து உள்ளது. தனது காரில் ஏற்பட்ட சேதத்திற்கு நஷ்டஈடு தர வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் சூர்யாவை கைது செய்துள்ளனர். அவரை விடுதலை செய்ய கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.